சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு
சிறைக்கைதிகள் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 12 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
பூஸா சிறைச்சாலையில் 09 கைதிகளும் ஏனைய கைதிகள் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் நேற்று அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தரவுகளுக்கமைவாக, வெலிக்கடை சிறைச்சாலையில் 323 பேருக்கும் பூஸா சிறைச்சாலையில் 70 பேருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 46 ஆக பதிவாகியுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் 46 பேர், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அவர்களில் மூவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொற்றுக்குள்ளான 113 கைதிகள் பூரண குணமடைந்துள்ளனர்.