பொகவந்தலாவையில் ஒருவருக்கு கொரோனா..!

பொகவந்தலாவையில் ஒருவருக்கு கொரோனா..!

பொகவந்தலாவ - மோரார் கிழ் பிரிவைச் சேர்ந்த 28வயதான இளைஞர் ஒருவருக்கு நேற்று மாலை கொவிட் 19 தொற்றுறுதியானதாக, பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

அவருக்கு கடந்த 24ம் திகதி பி.சீ.ஆர் பரீசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதன் பெறுபேறு நேற்று கிடைத்தது.

குறித்த இளைஞர் கொழும்பு செட்டியார் தெருவில் இருந்து கடந்த 17ம் திகதி பொகவந்தலாவை மோரார் தோட்டப்பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த நோயாளருடன் தொடர்புகளை பேணிய ஆறு குடும்பங்கள் 14 நாட்களுக்கு சுயதனிமை படுத்தபடுத்தப்பட்டுள்ளனர்