இரண்டு லொரிகள் நேருக்கு நேர் மோதியதில் ஆபத்தான நிலையில் ஒருவர்! தலைமறைவான நபர்
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இரண்டு லொரி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பி ஓடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை 1.30 மணியளவில் பெலன்னறுவை பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு துணிகளை ஏற்றி வந்த லொரியும் மரங்களை ஏற்றி வந்த மற்றுமொரு லொரியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பெலன்னறுவை பிரதேசத்தில் இருந்து வந்த லொரி சாரதி பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரம் ஏற்றி வந்த லொரி சாரதி தப்பி ஓடியுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.