தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை வரையறைகளுடன் முன்னெடுக்க தீர்மானம்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை வரையறைகளுடன் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அவசர சந்தர்ப்பங்களில் மாத்திரம் நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கமைவாக, நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
18 பொலிஸ் பிரிவுகளும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.