மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி..! காணொளி

மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி..! காணொளி

பதுளை - கொழும்பு பிரதான வீதியின் ஹாலிஎல - போகஹமடித்த பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகும் காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி வீதியின் அருகில் காணப்பட்ட மரம் ஒன்றில் மோதுண்டு நின்றுள்ளது.

சிறிது நேரத்தில் மரத்தின் பலம் காணாமையினால் குறித்த டிப்பர் ரக வாகனம் மீண்டும் பள்ளத்தை நோக்கி வீழ்ந்துள்ளது.

சாரதி வாகனத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டமையினால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.