ஜப்பானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட சிறுமியின் தற்போதைய நிலை..!

ஜப்பானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட சிறுமியின் தற்போதைய நிலை..!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் மகளான சிறுமியை இலங்கைக்கு அழைத்துவந்து திருமணம் செய்த இலங்கை இளைஞன் எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் மாரவில மூதுகொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமியை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும் பிணையில் விடுதலை செய்யவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்