கனரக வாகனங்கள் இரண்டு மோதி விபத்து!

கனரக வாகனங்கள் இரண்டு மோதி விபத்து!

மட்டக்களப்பு - கொழும்பு வீதி பிள்ளையாரடி பகுதியில் இன்று (27)அதிகாலை 1.30 மணியளவில் கனகர வாகனம் வேகக்கட்டுப்பாட்டை மீறி முன்னால் சென்ற மரம் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சாரதி ஒருவர் தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினமான இன்று அதிகாலை காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கனரக வாகனம் பிள்ளையாரடி பகுதியில் வீதியின் அருகில் தரித்து நின்ற மரங்களை ஏற்றிச் சென்ற லொறி வீதியில் பயணிக்க முற்பட்ட போது பின்னால் வந்த கனரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை மீறி லோறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் சாரதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்தவர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். இது தொடர்பான மேலதிக விசாரணையை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்