ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு மற்றுமொரு சலுகை

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு மற்றுமொரு சலுகை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு நீர் கட்டணங்களை செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு மற்றும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை நீர் கட்டணங்களை செலுத்துவதற்காக முன்று வகையான செயலிகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே நீர் கட்டணத்தை செலுத்த முடியும்.

SMART Pay, SelfCare, SMARTZone Web Portal ஆகிய மூன்று முறைகளைப் பின்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது நீர் கட்டணத்தை செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.