மாத்தளை மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு ஆபத்து நிலவுவதற்கான சாத்தியம் தென்படுவதனால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக கட்டிட ஆய்வு மையத்தின் மாத்தளை மாவட்ட புவியியல் நிபுணர் கே.எம்.சீ.டீ.மொறேமட தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகவில்லை என்பதால் மாத்தளை பிரதேசத்தில் மண்சரிவு ஆபத்துக்கள் தற்போதைக்கு தென்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் கடந்த வருடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்த இறத்தோட்டை, உக்குவளை, மற்றும் அம்பன்கங்கை கோறளை ஆகிய மலை சார்ந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் மொறேமட மேலும் தெரிவித்தார்.