தனிமைப்படுத்தல் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு பொறிமுறை
கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு பொறிமுறை ஒன்று வகுக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான கண்காணிப்பு பொறிமுறை கட்டமைப்பு மற்றும் பொறுப்புகள் குறித்து அமைச்சுக்ககள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், மாகாண சுகாதார செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கை இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.