வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த முடக்க செயற்பாடுகள் காரணமாக வாகன விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்ட போதிலும் தற்போது விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனச் சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாக நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையில் வாகன விபத்துக்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் மூவாயிரம் உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்படுகின்ற நிலையில் மேலும் 20 ஆயிரம் பேர் காயங்களுக்குள்ளாவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.