வழமைக்குத் திரும்பும் துறைமுக முனையங்களின் நடவடிக்கைகள்
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான அனைத்து முனையங்கள் மற்றும் ஏனைய பிரிவுகளின் நடவடிக்கைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
CICD மற்றும் SAGD முனையங்களுடன் இணைந்து அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள துறைமுக அதிகாரசபை, அதில் இதனை தெரிவித்துள்ளது.
COVID தொற்று நிலைமை காரணமாக கடந்த வாரத்தில் துறைமுக முனையங்களின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
துறைமுக அதிகாரசபை மேற்கொண்ட சுகாதார நடவடிக்கைகள் காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு துறைமுக சேவைகள் மற்றும் முனையங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை காணப்பட்டால், அது தொடர்பில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0112 320 405 மற்றும் 071 688 94 52 ஆகிய இலக்கங்களுடன் அழைப்பினை ஏற்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.