திடீரென உயிரிழந்த காவல் துறை அதிகாரியின் உடலத்திற்கு PCR பரிசோதனை

திடீரென உயிரிழந்த காவல் துறை அதிகாரியின் உடலத்திற்கு PCR பரிசோதனை

காலி முகத்திடலில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் திடீரென விழுந்து உயிரிழந்த கொள்ளுபிட்டி காவல் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஜே எம் நிலந்தவின் உடல் பீ சீ ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முந்தைய பதிவு

கொள்ளுபிட்டி காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.நிலந்த திடீரென உயிரிழந்தார்.

காலிமுகத்திடலில் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை அவர் கீழே விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பசறை பகுதியை சேர்ந்த 43 வயதான குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இறுதியாக அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டிருந்ததாக கொள்ளுபிட்டி காவல்துறை நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.