ஜப்பானிலிருந்து 15 வயது சிறுமியை கடத்தி வந்த இளைஞர்...!
ஜப்பானிலிருந்து 15 வயதுடைய சிறுமியை கடத்திக்கொண்டு இலங்கைக்கு வருகை தந்து மறைந்திருந்த நிலையில் வசித்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் ஜப்பானில் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் பணியாற்றிக்கொண்டு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார்.
இதன்போது குறித்த செல்வந்தரின் புதல்வியான 15 வயது சிறுமியுடன் காதல் கொண்டுள்ளார் என்பதோடு சிறுமியை பாலியல் வன்புணர்விற்கும் உட்படுத்தியுள்ளார்.
பின்னர் சிறுமியை அழைத்துக்கொண்டு குறித்த இளைஞர் தனது தாயகமான இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சிறுமியை காணவில்லை என சிறுமியின் தாய் இலங்கைக்கு வருகை தந்து கொச்சிக்கடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னுடைய புதல்வியிடம் காணப்பட்ட 10 லட்சம் ரூபாய் பணத்துடன் இலங்கையை சேர்ந்த இளைஞர் தனது மகளை கடத்தி வந்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை இளைஞரையும் ஜப்பானிய சிறுமியையும் தேடி காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
குறித்த இளைஞரின் சகோதரியின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
எனினும் குறித்த சிறுமி இளைஞரை விட்டு பிரிய மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.