
முதற்தடவையாக ஒன்லைன் முறையில் கூடும் கோப் குழு!
இலங்கையில் முதற்தடவையாக ஒன்லைன் முறையில், கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குறித்த குழு இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது.
களனி கங்கை நீர் மாசடைவது குறித்து உரையாடுவதற்காக அதிகாரிகளை இணையத்தின் ஊடாக தொடர்புபடுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய நேரடி வருகைகளைக் குறைத்து, குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கில் ஒன்லைன் முறைமை பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.