T-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்..!

T-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்..!

சியம்பலாண்டுவ - கொடயான - தொம்பகஹவில பகுதியில் ரீ-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த முன்னாள் இராணுவ வீரரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

53 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பதோடு குறித்த காலப்பகுதியிலேயே துப்பாக்கியை கொள்ளையிட்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.