நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

கொவிட்-19 நோயினால் நேற்றைய தினமும் இரண்டு மரணங்கள் நாட்டில் பதிவாகின.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொவிட்-19 நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு - 12 பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்ததார்

கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட அதிக இரத்த அழுத்தம் அவரின் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்ப்டடுள்ளது

பன்னிப்பிட்டி பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றுறுடையவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பிம்புற வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மரணித்தார்.

கொவிட்-19 தொற்று ஏற்பட்டதுடன், சிருநீரக செயலிழப்பு தாக்கம் அதிகரித்தமை அவரின் மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 502 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட்-19 கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்றைய நாளில், 485 பேர் குணமடைந்தனர்.

இதற்கமைவாக, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது

5 ஆயிரத்து 928 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சியில் நேற்றையதினம் 5 பேருக்கு கொவிட் 19 நோய் தொற்றுறுதி செய்யப்பட்டதாக, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் தொற்றுறுதியான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகரவிடம் எந்தவொரு நோய் அறிகுறியும் தென்படவில்லை என சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர் உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தட்டது.

இதையடுத்து. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகர, மஹர சிறைச்சாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டார்.

இதேநேரம், சிறைச்சாலைகளில் நேற்றைய தினம் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.