பிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....!

பிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துறை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.