மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 188 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்த எத்திஹாட் விமான சேவைக்கு சொந்தாமான விமானமூடாக 50 இலங்கையர்கள் இன்று அதிகாலை 12 .45 அளவில் நாடுதிரும்பியுள்ளனர்.
அத்துடன் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக தோஹா நகரில் இருந்து 48 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று அதிகாலை 1.45 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மேலும் தோஹா நகரில் இருந்து மற்றுமொரு குழுவினர் இன்று அதிகாலை 5. 25 அளவில் நாடு திரும்பியுள்ளனர்.
தொழில் நிமித்தம் கட்டார் சென்றிருந்த இலங்கையர்கள் 90 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே குறித்த அனைவரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.