மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

மழையுடனான காலநிலை நிலவுகின்ற நிலையில் மக்கள் டெங்கு நோய் பரவல் குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

அதேநேரம் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக, மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வங்களா விரிகுடாவின் தென்மேற்காக காணப்படுகின்ற மிக வலுவான தாழமுக்கமானது திருகோணமலை கரையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 280 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, சூறாவளியாக விருத்தியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பின்னரான 12 மணித்தியாலங்களில் அந்த சூறாவளியானது மேலும் தீவிரமடைந்து மிகப்பலத்த சூறாவளியாக மாற்றமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியான அடுத்த 48 மணித்தியாலங்களில் வட மேற்கு திசையின் ஊடாக தமிழகத்தின் கரையை ஊடரத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது,

இதன் காரணமாக இலங்கை நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் இடைஇடையே மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையில் பலத்த காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது,

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுவதோடு சில சந்தர்ப்பங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், வடமேல் மற்றும் கப்ரகமுவ மாகாணங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் யாழ்ப்பாணத்தில் கரையோரப்பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கேட்டுக்கொண்டார்.