யாழ் குடாநாட்டில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்! தொடரும் அச்சநிலை
வங்காள விரிகுடாவில் தற்போது நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மாகாணத்திற்கு தற்போது கிடைக்கின்ற மழைவீழ்ச்சி தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை காலை முதல் மிக அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்க தொடங்கும். நாளை நண்பகலுக்கு பின்னர் இவ் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக(நிவர்) மாற்றமடையும்.
புயல் கரையைக் கடக்கும் இடம் தொடர்பாக இன்னமும் குழப்பநிலை காணப்படுகின்றது.
பெரும்பாலும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில மாதிரிகளில் புயல் யாழ்ப்பாண குடாநாட்டினை ஊடறுத்து (புயலின் மையம் யாழ்ப்பாணத்திலும் மற்றும் வடமராட்சி கிழக்கிலும் உள்ளது) நாகப்பட்டினத்தில் கரையைக் கடக்கும் எனக் காட்டுகிறது.
ஆனால் இது உறுதியானதல்ல. தொடர்ந்து அவதானிக்கப்பட்டு அண்மைய நிலைமைகள் இற்றைப்படுத்தப்படும்.
வடக்கு மாகாணத்திற்கு தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் என்பதனால் தாழ்வான தரையுயரமுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.