சுதந்திரகட்சி வசமுள்ள வவுனியா-வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியில் உள்ள வவுனியா - வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பாதீடு இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற 2021 ஆண்டுக்கான வெங்கல செட்டிக்குளம் பிரதேசசபைக்கான பாதீட்டின் வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 7 பேரும் எதிராக 9 பேரும் வாக்களித்திருந்த நிலையில் பாதீடு தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று பாதீட்டில்; சில மாற்றங்களுடன் இரண்டாவது தடவையாக வாக்கெடுப்பு நடைபெற்றது.
கடும் கருத்து மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்ற இன்றைய வாக்கெடுப்பிலும் வெங்கல செட்டிக்குளம் பிரதேசசபைக்கான பாதீடு தோல்வியடைந்துள்ளது.
பாதீட்டுக்கு ஆதரவாக 7 பேரும் எதிராக 9 பேரும், வாக்களித்ததுடன் ஒரு உறுப்பினர் மாத்திரம் நடுநிலை வகித்திருந்தார்.
இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சி வகிக்கும் வெங்கல செட்டிக்குளம் பிரதேசசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்;டாவது முறையும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.