மாந்தை மேற்கு கிராம அலுவலகர் கொலை விவகாரம்- சந்தேக நபருக்கு மீள விளக்கமறியல்
மாந்தை மேற்கு கிராம அலுவலகர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் எம்.கணேசராஜா இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, அடுத்தமாதம் 7 திகதி வரையில் குறித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காவற்துறையின் கீழ் இருந்து குறித்த வழக்கின் விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரை விசாரனை செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரி ஊடாக ஒரு கட்டளையை பெற்றுள்ளனர்.
மேலும் சிலருடைய வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ளுவதற்கும், சிலருடைய வங்கி கணக்கு விபரத்தை பெற்றுக் கொள்வதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.