காவற்துறைமா அதிபராக சீ.டி.விக்ரமரத்னவை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையில் அனுமதி

காவற்துறைமா அதிபராக சீ.டி.விக்ரமரத்னவை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையில் அனுமதி

காவல்துறைமா அதிபராக சி.டி.விக்ரமரத்னவை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இன்று மாலை கூடிய நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 14 மேன்முறையீட்டு நிதிமன்ற நீதியரசர்களுக்கான அங்கீகாரமும் நாடாளுமன்ற பேரவை வழங்கியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான பாதீட்டு ஒதுக்கங்கள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருத்தங்களுடன் குறித்த நிதி ஒதுக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.