வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி
எல்பிட்டி-நவதகல பிரதேசத்தில் வசித்து வரும் சிறைச்சாலை அதிகாரியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் இவர், தமது வீட்டுக்கு திரும்பியிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த அதிகாரி உந்துருளியின் மூலமாக வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும், எல்பிட்டி பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையமொன்றுக்கும் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.