கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக் கப்பட்டதா என்பதை அறிய ஆசிரி யர்களிடம் இணைய மூலம் அபிப்பிராயம் பெறப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அனைத்து பாடத்திட்டங்களும் எந்த மட்டத்தில் உள்ளன என்பது குறித்துச் சம்பந்தப்பட்ட பாடங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்களிடமிருந்து விசாரிக்கக் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத் துள்ளது.
2020 ஆம் ஆண்டில் நாட்டில் நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாகப் பாடசாலைகளில் மாணவர் களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டது.
இருப்பினும், பல்வேறு டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங் களைப் பயன்படுத்துவதன் மூலமும், மாகாண, வலய மற் றும் பாடசாலை மட்டங்களில் ஒன்லைன் முறை மூல மாகவும் கற்றல் செயல்முறையைத் தொடர நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பாடசாலை களில் கிடைக்கும் வசதிகள் மற்றும் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களுக்கு ஏற்ப தரம் 11 மாணவர் களுக்கான பாடங்கள் அனைத்து பாடப்பிரிவுகளையும் ஆசிரியர்கள் உள்ளடக்கிய திறன் வெவ்வேறு நிலை களில் பெற்றிருக்கலாம்.
எனவே, இது தொடர்பாக ஒரு பரந்த புரிதலைப் பெறு வதற்கும் இது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுப்பதற் கும் கல்வி அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத் துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் அனைத்து பாடசாலைகளிலும் 11 ஆம் வகுப்புக்கான பாடங்களைக் கற்பித்தலுக்காகப் பொறுப்பேற்ற அந்த அந்த பாடங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் குறித்த பாடங்கள் தொடர்பாக ஒன்லைனில் https://info.moe.gov.lk/ என்ற இணையதளத்தில் சென்று தொடர் டைய தகவல்களை வழங்க வேண்டும்.
இந்த தகவல் 23.11.2020 முதல் ஒரு வாரத்திற்குள் வழங் கப்பட வேண்டும், மேலும் ஆசிரியர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளடக்கி அணு குவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவருக்குத் தகவல்களை அணுகுவது கடினம் என்றால், grade11@moe.gov.lk என்ற இணையதளம் ஊடாக உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பாட சாலை, மாகாணம் மற்றும் தொலைப்பேசி இலக்கங் களை அனுப்புவதன் மூலம் தொடர்புடைய தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
பாடத்திற்குப் பொறுப்பான ஆசிரியர்கள் சரியான தகவல் களை உள்ளடக்குவார்கள் என்றும், மாகாணம், கல்வி திணைக்களம் மற்றும் கல்விப் பிரிவில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் இது குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும்,
குறித்த செயல்முறையை அனைத்து மாகாண, திணைக் களம், கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்குக் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. கே. பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.