பண்டாரவளையில் ஒருவருக்கு கொரோனா..! 7 பேர் தனிமைப்படுத்தலில்...!
பண்டாரவளை - ஹெத்தளைபிட்டியவில் ஒருவருக்கு இன்று கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
தொற்றுறுதியானவர் அரச ஒளடத கூட்டுதாபனத்தில் பணியாற்றிய நிலையில் வீடு திரும்பியவர் என ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அவர் கடந்த 20 ஆம் திகதி பண்டாரவளை நகரில் உள்ள சிகையலங்காரம் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் ஹப்புத்தளை - பலகல பகுதியில் உள்ள தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் பண்டாரவளை நகரில் உள்ள குறித்த சிகையலங்கார நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர அந்த சிகையலங்கார நிலையத்திற்கு 20 ஆம் திகதிக்கு பின்னர் சென்றவர்கள் தொடர்பிலும் தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும் ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய குறிப்பிட்டார்.