நாடாளுமன்றில் ஒக்டோபரில் சிறப்பாகச் செயற்பட்ட 10 பேரின் விபரங்கள் வெளியாகியது: தமிழ் உறுப்பினர்களுக்கு இடமில்லை

நாடாளுமன்றில் ஒக்டோபரில் சிறப்பாகச் செயற்பட்ட 10 பேரின் விபரங்கள் வெளியாகியது: தமிழ் உறுப்பினர்களுக்கு இடமில்லை

நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் சிறப்பாகச் செயற்பட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் படி எதிர்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிக இடத்தில் உள்ளனர்.

நாடாளுமன்றம் வருகை, விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே manthri.lk எனும் இணையத்தால் குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

முதல் பத்து இடங்களைப் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருமாறு,

1. அநுரகுமார திஸாநாயக்க (தேசிய மக்கள் சக்தி)

2. அஜித் நிவாட் கப்ரால் (ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி)

3. சஜித் பிரேமதாஸ (ஐக்கிய மக்கள் சக்தி)

4. ஹர்ஷ டி சில்வா (ஐக்கிய மக்கள் சக்தி)

5. மஹிந்தானந்த அளுத்கமகே (ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி)

6. பந்துல குணவர்தன (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)

7. வேலு குமார் (ஐக்கிய மக்கள் சக்தி)

8. புத்திக பத்திரண (ஐக்கிய மக்கள் சக்தி)

9. எஸ். சேமசிங்க (ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி)

10. எஸ். எம். மரிக்கார் (ஐக்கிய மக்கள் சக்தி)