ஆயுள் தண்டனை கைதி ஒருவரை காவுகொண்ட கொரோனா..!

ஆயுள் தண்டனை கைதி ஒருவரை காவுகொண்ட கொரோனா..!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகவீனமுற்ற நிலையில் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் திடீரென உயிரிழந்தமையை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போதான பீ சீ ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரழந்தவருக்கு 82 வயது என்பது குறிப்பிடத்தக்கது.