பாடசாலைகளுக்கு குறைந்தளவிலான மாணவர்களே வருகை தந்தனர்...!

பாடசாலைகளுக்கு குறைந்தளவிலான மாணவர்களே வருகை தந்தனர்...!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மூன்றாவது தவணைக்காக பாடசாலைகள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டன.

எனினும் இன்று பாடசாலைகளுக்கான மாணவர் வருகை மிகவும் குறைவாக இருந்ததாக  தெரிவிக்கபடுகின்றது

எவ்வாறாயினும் அதிகமான பாடசாலைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகளவில் மாணவர்களின் வருகை பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகையும் அதிகமாக காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எம்பிலிபிட்டிய பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்ட அவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் அவருக்கு எந்தவொரு கொரோனா நோய் அறிகுறியும் இல்லை என குறித்த வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களின் பதிவு இன்று முதல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பதிவுசெய்தல் இணைய நிகழ்நிலை கட்டமைப்பு ஊடாக மட்டுமே இடம்பெறும்.

அதற்கான வழிமுறைகள் மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

2019-2020 புதிய கல்வியாண்டில் சுமார் 41,500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.