மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கடற்பிராந்தியங்கள் வழியாக பொத்துவில் வரையிலான கடற் பிரதேசங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது

அத்துடன் தற்பொழுது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கரைக்கு திரும்புமாறும் அல்லது பாதுகாப்பான கடற்பகுதிகளுக்குள் பிரவேசிக்குமாறும் அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், புத்தளம் கொழும்பு வழியாக மாத்தறை வரையிலான கடற்பிராந்தியங்களிலும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவிலயல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அல்லது 150 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும், குறித்த மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது.

இதனாலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.