இரத்தினபுரியில் திடீரென 4578 பேர் தனிமைப்படுத்தல்
இரத்தினபுரி மாவட்டத்தில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மால னி லொகு போதாகம தெரிவித்தார்.
அத்துடன் 1369 குடும்பங்களைச் சேர்ந்த 4578 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அ வர் தெரிவித்தார்.
மேலும் கொரோனா தடுப்பு வேலை திட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக வழிநடத்திச் செயற்படுவதாகவும் இதற்காக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பே கடுவ சப்ரகமுவ மாகாண வைத்திய சேவைகள் அத்தியட்சகர் கபில கண்ணங்கர, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்திய நிர்வாகம் மற்றும் பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் அமைப்பின் உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசு இயந்திரம் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.