
அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பொதுமக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொவிட் 19 காரணமாக அரசி, சீனி மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான நிர்ணய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், பொதுமக்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தும் வகையில் சில வர்த்தகர்கள் அந்த பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவ்வாறான வர்த்தகர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.