நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொவிட்19 நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,171 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 391 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் பேலியகொடை மற்றும் திவுலுபிட்டிய கொத்தணிகளின் நோயர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இரட்டைக் கொத்தணிகளின் நோயாளர்களது எண்ணிக்கை 16,643 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொவிட்19 நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் 14,069 பேர் குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் தற்போது 6,015 பேர் கொவிட்19 நோய்க்காக நாட்டின் பல்வேறு சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, உலக அளவில் கொவிட் 19 பரவும் நாடுகளின் வரிசையில் இலங்கை தொடர்ந்தும் 99ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.