சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இன்று முதல் வழமைக்கு திரும்பும் காரியாலய தொடரூந்து சேவைகள்

சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இன்று முதல் வழமைக்கு திரும்பும் காரியாலய தொடரூந்து சேவைகள்

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட காரியாலய தொடரூந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

எனினும் தனிமைப்படுத்திய பகுதிகளில் உள்ள தொடரூந்து நிலையங்களில் தொடருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானுக்கு செல்லும் குடியேறிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இன்றி அந்த நாட்டுக்கு நுழைவதற்காக அனுமதி வழங்கப்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.