இலங்கை விடயத்தில் ஐ.நா முறையாக செயற்பட தவறிவிட்டது- பராக் ஒபாமா

இலங்கை விடயத்தில் ஐ.நா முறையாக செயற்பட தவறிவிட்டது- பராக் ஒபாமா

இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முறையாக செயற்படுவதற்கு தவறிவிட்டதாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தாம் பதவி வகித்த காலகட்டம் குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இருக்கின்ற ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வேற்றுமையால், ஐக்கிய நாடுகள் சபை முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.

சோமாலியா, இலங்கை போன்ற நாடுகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் முறையாக செயற்பட முடிந்திருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.