நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!
நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து இன்றைய தினம் மேலும் 479 பேர் குணமடைந்தனர்.
இதற்கமைய 14 ஆயிரத்து 69 பேர் இதுவரையில் இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறி இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது ஐந்தாயிரத்து 619 பேர் கொவிட் 19 நோய்தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரையில் 19 ஆயிரத்து 771 பேர் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கு இன்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது,
அம்பமுகவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினுடைய பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் இதனைத் தெரிவித்தார்.
இன்று நேற்றும் சுமார் 100 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதகைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.