கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி – நிபுணர்கள் குழு
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரேயொரு சாத்தியமான வழி என அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதற்கு இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். மேலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக அரசாங்கத்தால் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த குழுவினர் இது குறித்து ஆராய்ந்துள்ளனர். இந்த நிலையிலேயே, உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி என அந்தக் குழு தெரிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.