புதையல் அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்கள் கைது

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்கள் கைது

கண்டி - ஹந்தானை வனப்பகுதிக்கு சொந்தமான ஹல்ஓயா பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் இராணுவ கோப்ரல் ஒருவரும், சமுர்த்தி கண்காணிப்பாளர் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கம்பளை உதவி காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன