
பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோருக்கு பொலிஸாரின் அறிவித்தல்!
பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் முறையான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து பொலிஸார் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களின் நடமாட்டத்தை அவதானிப்பார்கள் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.