நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான தகவல்கள்

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான தகவல்கள்

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களுள் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய நாளில் மாத்திரம் 491 கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களுள் கொழும்பிலிருந்து 292 பேரும், கம்பஹாவிலிருந்து 87 பேரும் குருநாகலையில் இருந்து 17 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 11 பேரும் கண்டியில் 07 பேரும் இரத்தினபுரியில் 05 பேரும் காலியில் இருந்து 04 பேரும் அடையாளம் காணப்பட்டதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.