
சேவையில் இருந்து நீக்கப்படவுள்ள இலங்கை உர கூட்டுத்தாபனத்தின் மேலும் 7 அதிகாரிகள்
இலங்கை உர கூட்டுத்தாபனத்தின் மேலும் 7 அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை சேவையில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே நேற்று நாடாளுமன்றித்தில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்தில் இடம்பெற்ற 90 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பிலேயே அவர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உரக்கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு அமைவாக 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதன் தலைவராக செயற்பட்ட ரொஷான் நந்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.