காவற்துறைமா அதிபர் நியமனம் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் நாளை திங்கட்கிழமை (23) மாலை 4 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது காவற்துறைமா அதிபர் நியமனம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதோடு, மேற்முறையீட்டு நீதிமன்றில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பரிந்துரை செய்துள்ள பெயர்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வருடம் 7 மாதங்கள் வரையில் மேலதிக காவற்துறைமா அதிபராக கடமையாற்றியிருந்த சீ.டி.விக்ரமரத்னவை காவற்துறைமா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.