வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 167 இலங்கையர்கள்..!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 167 இலங்கையர்கள்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த மேலும் 167 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்றிரவு 125 பேரும், கட்டாரில் இருந்து இன்று அதிகாலை 42 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்