தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்.!

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்.!

தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய தினம் அதிகாலை 5 மணியுடன் சில இடங்கள் விடுவிக்கப்படவிருப்பதாக இராணுவத்தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் வனாத்துமுல்லை கிராம சேவகர் பிரிவைத் தவிர்ந்த பொரளை பகுதி, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை, வாக்கந்தையைத் தவிர்ந்த கொம்பனித்தெரு பகுதி என்பன விடுவிக்கப்படவுள்ளன.

அதேபோன்று, கம்பஹா மாவட்டத்தில் கடவத்தை மற்றும் ஜா-எல ஆகிய இடங்களும் நாளை காலை 5 மணியுடன் விடுவிக்கப்படும் என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

அதேநேரம் பமுனுமுல்ல, போகஹாவத்தை, கிரிமந்துடுவ, ஹொரவலை, அட்டாலுகம மேற்கு, பண்டாரகம பிரதேசத்தில் கலகஹமந்திய கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.