வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 வாக்குகளால் நிறைவேற்றம்

2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன

இந்நிலையில், வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.