இலங்கை குழந்தைகளின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் கல்வி தொடர்பில் அவதானம் செலுத்தும் ஐ.நா சிறுவர் நிதியம்

இலங்கை குழந்தைகளின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் கல்வி தொடர்பில் அவதானம் செலுத்தும் ஐ.நா சிறுவர் நிதியம்

இலங்கையில் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் அவதானம் செலுத்தியுள்ளது.

குழந்தைகளின் பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் கல்வி அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக குறித்த நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடல் பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டுஅரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.