இன்றும் நாளையும் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம்

இன்றும் நாளையும் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம்

இன்று (21) மற்றும் நாளைய (22) தினங்களில் பயணிகள் போக்குவரத்து ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த இரு நாட்களும் அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வார இறுதியில் வழமையான கால அட்டவணையின் பிரகாரம் பஸ் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பஸ் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுமெனவும் சபை குறிப்பிட்டுள்ளது.