கொரோனாவுக்கு மத்தியில் எலி காய்ச்சல் பரவும் அபாயம்- சுகாதார பிரிவு எச்சரிக்கை

கொரோனாவுக்கு மத்தியில் எலி காய்ச்சல் பரவும் அபாயம்- சுகாதார பிரிவு எச்சரிக்கை

நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்தாண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமத்திய, வடமேல், சபரகமுவ மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாகவும் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் ஜீவனோபாய தொழிலாக விவசாயம் மற்றும் சுரங்கத் தொழில்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே அங்கு பெரும்பாலான நபர்கள் எலி காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொவிட் 19 வைரஸ் தொற்றைப் போலவே எலிக்காய்ச்சல் தொடர்பிலும் பொதுமக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.