ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற பெண்ணை தேடும் பணிகள் தீவிரம்
கொரோனா வைரஸ் தொற்றுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தமது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண்ணை தேடுவதற்கு 3 காவற்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அதற்கு மேலதிகமாக, சுகாதார பிரிவினரும், ஏனைய பிரிவினரும் வெள்வேறு இடங்களில் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி - எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 25 வயதான குறித்தப் பெண், நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் தமது இரண்டரை வயதான குழந்தையுடன் ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார்.
எஹெலியகொட பிரதேசத்திலுள்ள தப்பிச் சென்றப் பெண்ணின் வீட்டிலிருந்து நேற்று காலை குறித்த இரண்டரை வயதான குழந்தை மாத்திரம் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பெண்ணை தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.